அன்னிய செலாவணி மோசடி: லலித் 'கூட்டாளி' வசுந்தர ராஜே மகனிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை?!
டெல்லி: அன்னிய பணப்பரிவர்த்தனை சட்ட விதி (ஃபெமா) மீறல் தொடர்பாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சொந்தமான ஆனந்த் ஹெரிட்டேஜ் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சஜ்ஜன் மோடியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங்கையும் விசாரிக்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சொந்தமானது ஆனந்த் ஹெரிட்டேஜ் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்தின் இணை இயக்குநர்களாக 2007ஆம் ஆண்டு வரை இருந்தவர்கள் சஜ்ஜன் மோடி, சத்ய நாராயணன் ஆகியோர்..

இதன் பின்னர் மொரீஷியஸைச் சேர்ந்த லா மோ என்பவருக்கு சொந்தமான வில்டன் இன்ஸ்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ரூ21 கோடியை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து கையகப்படுத்திக் கொள்கிறது.
அதே நேரத்தில் வசுந்தரராஜே மகன் துஷ்யந்த் சிங்குக்கு சொந்தமான நியாந்த் ஹெரிட்டேஜ் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2007ஆம் ஆண்டு லலித் மோடியின் ஆனந்த் நிறுவனத்துக்கு ரூ11 கோடி கடன் கொடுத்ததாகவும் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனந்த் ஹோட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மொரீஷியஸ் நிறுவனம் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி பெறவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த மொரீஷியஸ் நிறுவனம் மூலமான முதலீடு மற்றும் துஷ்யந்த் சிங் நிறுவனம் கடனாக கொடுத்ததாக காட்டப்படும் கணக்கு ஆகியவை குறித்து அமலாக்கப் பிரிவு சந்தேகம் தெரிவிக்கிறது.
இதில் அன்னியப் பணபரிவர்த்தனை சட்டமான ஃபெமாவின் விதிமீறல்கள் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே ஆனந்த் ஹோட்டலின் இயக்குநராக இருந்த சஜ்ஜன் மோடியிடம் நேற்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்தே வசுந்தரராஜே மகன் துஷ்யந்த் சிங்கையும் விரைவில் விசாரிக்க இருக்கிறது அமலாக்கப் பிரிவு என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
அலைகள் ஓய்வதில்லை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications