ஜார்க்கண்ட் அமைச்சரின் பி.ஏ.-வின் வேலைக்காரர் வீட்டில் ரூ20 கோடி ரொக்க குவியல்- ஆடிய அமலாக்கத்துறை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் அலாம்கிர் ஆலமின் உதவியாளரின் வேலைக்காரர் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ20 முதல் ரூ30 கோடி ரொக்கப் பணத்தை அதிர்ச்சியுடன் கைப்பற்றினர்.
ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் ஆலன். ஜார்க்கண்ட் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் வீரேந்திர ராம் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்களும் அடக்கம். இதனையடுத்து அமலாக்கத்துறை களமிறங்கியது.

ஜார்க்கண்ட் அமைச்சர் அலாம்கிர் உதவியாளரின் வீட்டு வேலைக்காரர் சஞ்சீவ் லால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது சஞ்சீவ் லால் வீட்டில் குவியல் குவியலாக ரூ20 கோடி முதல் ரூ30 கோடி வரையிலான ரொக்கப் பணம் குவிக்கப்பட்டிருந்தது கண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
இதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதை கண்டறிய ஏராளமான பணம் எண்ணும் மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அனைத்து பணமும் எண்ணி முடிக்க பல மணிநேரம் ஆகும் என்பதால் ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கைப்பற்ற பணம் எவ்வளவு என்பது பின்னரே தெரியவரும் என்கின்றன அமலாக்கத்துறை அதிகார வட்டாரங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications