ஹெலிகாப்டர், தாய்லாந்தில் சொகுசு வில்லா, தோண்ட தோண்ட ரொக்கம்.. டெல்லி தொழிலதிபர் வீட்டில் ED ரெய்டு
சிம்லா: கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி, இமாச்சலப் பிரதேச பகுதிகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் மிகப் பெரிய பூதம் வெளியே வந்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான இடங்களில் நடந்த இந்தச் சோதனையில் ₹80 கோடிக்கு மேல் மதிப்புள்ள பினாமி வெளிநாட்டுச் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது சட்டங்களை ஏமாற்றி முறைகேடாகப் பணம் சேர்ப்போர், உரிய வரி செலுத்தாமல் இருப்போரைக் குறிவைத்து அமலாக்கத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படித் தான் கடந்த செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் இமாச்சலப் பிரதேசம், டெல்லியில் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை ஆறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது.

ரூ.80 கோடி சொத்து
டெல்லியைச் சேர்ந்த இம்பீரியல் குழுமத்தின் தலைவரான மன்விந்தர் சிங், அவரது மனைவி சாகிரி சிங் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் குறிவைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது. FEMA எனப்படும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த ரெய்டில் ₹80 கோடிக்கு மேல் மதிப்புள்ள பினாமி வெளிநாட்டுச் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மன்விந்தர் சிங் மற்றும் அவரது மனைவி சாகிரி சிங் பினாமி மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்களிலும் சொத்துக்களிலும் முதலீடு செய்துள்ளது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது. சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருக்கும் பல முக்கிய நிறுவனங்களில் இவர்கள் முறைகேடாகப் பணத்தை முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர்
இந்தத் தம்பதியுடன் தொடர்புள்ள துபாய் நிறுவனம் கடந்த மே மாதம் ரூ.7 கோடி மதிப்பிலான ராபின்சன்-66 ஹெலிகாப்டரை வாங்கியிருக்கிறது. அது ஹாங்காங்கை தளமாகக் கொண்ட நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடனால் வாங்கப்பட்டது என்பதையும் அமலாக்கத் துறை தனது விசாரணையில் கண்டறிந்தது. இப்படிப் பல சர்வதேச நெட்வோர்க் பினாமிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இந்த ஹெலிகாப்டர் இப்போது இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஆராமா பள்ளத்தாக்கில் தான் இருக்கிறதாம்.
தாய்லாந்து வில்லா
அமலாக்க துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் துபாய் நிறுவனத்தில் சுமார் ₹38 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுச் சொத்துகள் கண்டறியப்பட்டன. மேலும், தாய்லாந்தின் கோ சமுயில் உள்ள ரூ. 16 கோடி மதிப்பிலான ஆடம்பரமான வில்லாவும் இவர்கள் முதலீடு செய்திருந்த நிறுவனம் மூலம் வாங்கப்பட்டது தெரிய வந்தது. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் என விசாரணையில் தோண்டத் தோண்டப் பெரிய பூதங்கள் வெளியே வந்துள்ளது.
தோண்ட தோண்ட ரொக்கம்
இது மட்டுமின்றி சிம்லாவில் ஆராமா பள்ளத்தாக்கு பகுதியில் இந்தத் தம்பதிக்குத் தொடர்புடைய இடத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரங்களையும் அமலாக்கத் துறை கைப்பற்றியது. அதாவது இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி இவர்கள் விற்றுள்ளனர். அதுபோல விற்பனை செய்யும்போது கணிசமான தொகையைக் கணக்கு வராமல் இருக்க ரொக்கமாக வசூலித்துப் பதுக்கி வைத்திருப்பதும் அம்பலமானது.
இந்தப் பணத்தையே ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு, வெளிநாடுகளில் பினாமி சொத்துக்களை வாங்குவதற்கு அல்லது பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது. அதிகாரிகளின் இந்தச் சோதனையில் பழைய ரூபாய் நோட்டுகள் உட்பட ₹50 லட்சம் ரொக்கம், 14,700 அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகள், மூன்று லாக்கர்கள், பல முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications