விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்: வரும் 18 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
டெல்லி: வங்கிகளில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து லண்டனுக்கு தப்பியதாக கூறப்படும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பையில் உள்ள அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், விஜய் மல்லையா வரும் 18-ம் தேதி நேரில் ஆஜர் ஆகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கிங்க்பிஷர் விமானத்தை இயக்குவதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், மல்லையாவையும், அவரது கிங்பிஷர் நிறுவனத்தையும் கடனை திருப்பிச் செலுத்த தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை அறிவித்தன. இது தொடர்பாக மல்லையா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் மல்லையா கடன் வாங்க உதவியதாக ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்னாள் சேர்மேன் மற்றும் நிர்வாக இயக்குநர் யோகேஷ் அகர்வால், மற்றும் இரு நிறுவனங்களின் முன்னாள் இந்நாள் முக்கிய அதிகாரிகள் ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக இன்று காலை, முன்னாள் யு.பி.குழுமம் தலைமை நிதி அதிகாரி வி நெடுங்காடி மும்பையில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
-
ஆப் லோன்களுக்கு மாற்றாக உள்ள சூப்பர் வழிகள்.. கடன் வாங்கியவர்களுக்கு லட்சக்கணக்கில் லாபம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications