Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛முன்பே வந்த தகவல்’’.. அமலாக்கத்துறை கைது பற்றி ஹேமந்த் சோரன் வெளியிட்ட வீடியோ.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அமலாக்க்த்துறை கைது செய்வதற்கு முன்பே ஹேமந்த் சோரன் வெளியிட்ட பரபரப்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இருந்தார். இவர் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது.

 ED will arrest me but I am not worried, says Hemant Soren before his arrest by ED and releases video

மேலும் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை ஹேமந்த் சோரன் நிராகரித்தார்.

அதன்பிறகு கடந்த மாதம் 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் ராஞ்சியில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் 30 மணிநேரம் மாயமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பிஎம்டபிள்யூ உள்பட 2 கார், ஆவணங்கள், ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மீண்டும் நேற்று ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 7 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதையடுத்து புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் கைதுக்கு முன்பாக ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், ‛‛விசாரணையின் முடிவில் பெரும்பாலும் அமலாக்கத்துறை என்னை கைது செய்யும். கைது செய்வதால் நான் கவலைப்படபோவது இல்லை. ஏனென்றால் நான் ஷிபு சோரனின் மகன். எனக்கு தொடர்பில்லாத அதேவேளையில் எந்த ஆதாரத்தையும் எனக்கு எதிராக அவர்களால் கண்டுபிடிக்கவில்லை.

டெல்லி இல்லத்தில் சோதனை நடத்தி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். ஏழைகள், தலித், ஆதிவாசி, அப்பாவி மக்களுக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிரான ஆதிவாசிகள் மீது வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக நாம் புதிய போராட்டத்தை நடத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+