பாஜக- அதிமுக கூட்டணி முறிவு: வாயை திறக்கவே மாட்டேனே... ஆந்திரா பிரஸ்மீட்டில் அடம்பிடித்த எடப்பாடி!
விஜயவாடா: பாஜகவுடனான கூட்டணியை முறித்தது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியிருப்பது கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சித்து வந்தார். இது தொடர்பாக டெல்லியிலும் அதிமுக தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.

உக்கிரம் காட்டிய அண்ணாமலை: டெல்லியில் புகார் தெரிவித்த பின்னர்தான் அதிமுக தலைவர்களை படு உக்கிரமாக அண்ணாமலை விமர்சித்தார். ஒரு கட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஆதரவு தர முடியாது என தடாலடியாக அறிவித்தார் அண்ணாமலை.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: இன்னொரு பக்கம் , எடப்பாடி பழனிசாமிக்கு பக்கத்திலேயே இருக்கும் சிலரை வைத்து அதிமுகவை உடைக்கும் சதிகளை டெல்லி தொடங்கிவிட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. இதனால் வேறுவழியே இல்லாமல் அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டி, பாஜகவுடனான கூட்டணி முறிந்தது; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது என தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தனர்.
மீண்டும் கூட்டணியோ?: ஆனாலும் அதிமுக எந்த நேரத்திலும் பாஜகவுடன் சமாதானமாகிவிடும் என்கிற சந்தேகம் எதிர்க்கட்சிகளால் மட்டுமல்ல... அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களாலுமே எழுப்பப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் பெரும் மவுனமாக இருக்கின்றனர். பாஜக தரப்பிலும் அதிமுகவை காட்டமாக விமர்சிக்கும் கருத்துகள் வரவில்லை. இந்த சந்தேகங்களுக்கு எப்போது விடை கிடைக்கும் என்பதும் தெரியாத நிலைமைதான் தற்போது வரை உள்ளது. டெல்லி பாஜக தலைமையும் அதிமுகவின் தீர்மானத்தை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்யாமல் இருந்து வருகிறது.
ஆந்திராவில் எடப்பாடி பழனிசாமி: இந்நிலையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சென்றார். அங்கு கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சாமி தரிசனம் மட்டுமே செய்ய வந்திருக்கிறேன் என்றார். ஆனாலும் விடாத செய்தியாளர்கள், பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கையை எடுத்து கும்பிட்டு Please... Please.. என வாயையே திறக்க மாட்டேனே என்ற ரேஞ்சில் அடம்பிடித்தபடியே நகர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. விஜயவாடாவை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி!












Click it and Unblock the Notifications