For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் கார்டில் வருகிறது தற்காலிக எண்.. எட்வர்ட் ஸ்னோடெனின் எச்சரிக்கை பலிக்கிறதா?

ஆதார் எண்ணிற்கு பதிலாக 16 இலக்க தற்காலிக எண்ணை பயன்படுத்தும் படி ஆதார் அமைப்பு கூறியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் மாற்றம் செய்யும் ஆதார் அமைப்பு...என்னதான் நடக்கிறது?- வீடியோ

    டெல்லி: ஆதார் அமைப்பு மறுபடியும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த முறை வேறு யாரும் ஆதார் குறித்து தவறாக கூறாமல் அந்த அமைப்பே சுயமாக பிரச்சனையை தனக்கு தானே உருவாக்கி இருக்கிறது.

    110 கோடி மக்கள் பயன்படுத்தும் ஒரு பெரிய அடையாள அட்டை அமைப்பு தனக்கு தகுந்தாற் போல் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது. தற்போது அனைவரும் 16 இலக்க தற்காலிக எண்ணை ஆதார் எண்ணிற்கு பதிலாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    எட்வர்ட் ஸ்னோடென் ஒருமுறை ''இனி போர் ஆயுதங்கள் மூலம் வராது, கணினியின் மூலம் வரும்'' என்றார். இப்போது அவரின் வாக்கு பலித்து இருக்கிறது. முக்கியமாக அவர் ஆதார் குறித்து எச்சரிக்கை விடுத்ததும் பலித்துள்ளது.

    எட்வர்ட் ஸ்னோடென்

    எட்வர்ட் ஸ்னோடென்

    சிஐஏ அமைப்பில் வேலை பார்த்து பின் அங்கு இருந்து வெளியே வந்தவர் எட்வர்ட் ஸ்னோடென். இணையத்தின் மூலம் ஒரு அரசு நாட்டின் மக்களை எப்படி எல்லாம் கண்காணிக்கிறது என்ற உண்மைகளை வெளியிட்டார். இவர் தற்போது ரஷ்யாவில் தற்காலிக குடியுரிமை பெற்று வசிக்கிறார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    மக்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்கள் குறித்து பேசும் இவர் ஆதார் குறித்தும் பேசி உள்ளார். ஆதார் என்பதே மோசடி, அரசு மக்களின் அனுமதியுடன் விவரங்களை திருடத்தான் இப்படி அட்டை வழங்கப்படுகிறது என்றார். மேலும் ஆதார் அமைப்பையே கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

    பிரச்சனை ஆரம்பம்

    பிரச்சனை ஆரம்பம்

    தற்போது அவர் சொன்னது போலவே ஆதார் அமைப்பிற்கே அதன் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இனி ஆதார் எண்ணிற்கு பதிலாக 16 இலக்க 'தற்காலிக' எண்ணை பயன்படுத்தும் படி மிகவும் எளிதாக கூறியுள்ளது. இதுதான் பாதுகாப்பு என்று தெரிவித்து இருக்கிறது. அப்படி என்றால் இவ்வளவு நாள் இந்த விவரம் எல்லாம் பாதுகாப்பாக இல்லையா என்ற சந்தேகம் வருகிறது.

    என்னதான் விளக்கம்

    என்னதான் விளக்கம்

    ஆதார் இனி தற்காலிக எண்ணை பயன்படுத்த சொல்லி இருக்கிறது. ஆனால் 70 சதவிகித மக்கள் ஏற்கனேவே தங்கள் எண்ணை மொபைல், வங்கி என அனைத்திலும் இணைத்து விட்டார்கள். எனவே அவர்களின் கதி, அவர்களின் அடையாளம் எல்லாம் களவு போய் இருக்குமா என்று சந்தேகிக்கப்படுகிறது.

    English summary
    English magazine The Tribune has exposed the Aadhaar breach racket by its sting operation. Edward Snowden's warned about Aadhaar, says that Aadhaar is not safe for the people, and it is not for the country. Now Aadhaar introduces Virtural ID for instant uses . This virtual id system raises many question in the safety of the Aadhaar card and People's identity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X