குடி போதையில் மேலாடை இன்றி நடனம் ஆடிய 8 உ.பி. போலீசார் சஸ்பெண்ட்
சம்பல்: உத்திரப்பிரதேசத்தில் குடி போதையில் மேலாடை இன்றி ஹோட்டலில் நடனம் ஆடிய எட்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட போலீசார் எட்டு பேர், கடந்த 15ம் தேதி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் வளாகத்தில், குடி போதையில் மேலாடை இன்றி நடனம் ஆடியதாகக் கூறப்படுகிறது.
அநாகரீகமான முறையில் பலர் வந்து செல்லும் இடத்தில் அப்போலீசார் குடித்து விட்டு நடனமாடியதாக அவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர் ஹோட்டல் நிர்வாகத்தார்.
விசாரணையில் ஹோட்டல் வளாகத்தில் 8 போலீசார் மது குடித்திருந்ததும், மேலாடை இன்றி நடனம் ஆடியதும் உறுதி செய்யப் பட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட 8 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து, அம்மாவட்ட போலீஸ் சூப்பிரடிண்ட் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப் பட்ட போலீசாரின் விபரமாவது, விவேக் சவான், சூரஜ் தோமர், சூரப் குமார், சந்தீப் குமார், தீன்தயாள் சிங், ஹிடேஸ் சவுத்ரி, சச்சின் மாலிக் மற்றும் ஹேமந்த் ஆகும்.












Click it and Unblock the Notifications