வேன், டிரக் எல்லாம் ஓல்டு.. புல்டோசரில் சென்று பாஜக நிர்வாகிகள் பிரசாரம்.. பரபரக்கும் குஜராத் களம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் இருவாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குஜராத்தின் மோர்பி நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். யோகி ஆதித்யநாத் வருவதற்கு முன்பாக பாஜகவினர் புல்டோசரில் சென்று பாஜகவுக்கு ஆதரவாக அங்கு பிரசாரம் மேற்கொண்டனர்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

குஜராத்தில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது.

குஜராத் தேர்தல் களம்

குஜராத் தேர்தல் களம்

அதேவேளையில் காங்கிரஸ் கட்சியும் இம்முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், ஆம் ஆத்மியும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறது. இதனால், குஜராத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சரியாக இரு வாரங்கள் கூட இல்லாததால் குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் சூறாவளி பிரசாரம்

யோகி ஆதித்யநாத் சூறாவளி பிரசாரம்

கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆளும் பாஜக தரப்பில் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டு இருக்கின்றனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று குஜராத்தில் பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தனது சூறாவளி பிரசாரத்தை குஜராத்தின் மோர்பி நகரில் மேற்கொண்டார்.

புல்டோசர் பிரசாரம்

புல்டோசர் பிரசாரம்

யோகி ஆதித்யநாத் வருகை தருவதற்கு முன்பாக பாஜகவினர் புல்டோசரில் வந்து வாக்கு சேகரித்தனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். யோகி ஆதித்யநாத்தின் புல்டோசர் நடவடிக்கையை புகழும் வகையில் பாஜகவினர் இவ்வாறு புல்டோசரில் வந்து பிரசாரம் செய்வதாக அங்கிருந்த வாக்காளர்கள் பேசுவதையும் கேட்க முடிந்தது.

காங்கிரஸ் பிரச்சினைகளை தீர்க்காது

காங்கிரஸ் பிரச்சினைகளை தீர்க்காது

குஜராத்தின் மோர்பி நகரில் பிரசாரத்தை தொடங்கிய யோகி ஆதித்யநாத் காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார். யோகி ஆதித்யநாத் கூறுகையில், "உங்களின் நம்பிக்கைகளுக்கு காங்கிரஸ் மதிப்பு கொடுக்காது. உங்கள் பிரச்சினைகளை தீர்க்காது. காங்கிரசால் இந்தியாவையும் பாதுகாக்க முடியாது. தேசிய கீதத்திற்கு கூட அவர்களால் மதிப்பு கொடுக்க முடியாது" என்றார்.

பிரதமர் மோடிக்கு பாராட்டு

பிரதமர் மோடிக்கு பாராட்டு

மேலும் பிரதமர் மோடியை பாராட்டி பேசிய யோகி ஆதித்யநாத், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் மோடி சூழலை சிறப்பாக கையாண்டார்" என்றார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் இன்று குஜராத்தின் சூரத் நகரில் பிரசாரம் செய்தார். அப்போது ஜேபி நட்டா கூறுகையில், "வளர்ச்சி என்றாலே அது பாஜகவை சார்ந்ததுதான். காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ யாத்திரை செல்லவில்லை. பாரத் குழப்பத்தை உருவாக்குகிறது.

பாஜக ஆட்சியின் சாதனைகள் பற்றி

பாஜக ஆட்சியின் சாதனைகள் பற்றி

பாராளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்சல் குருவிற்கு ஆதரவாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ராகுல் காந்தி சென்று ஆதரவு தெரிவித்தார்" என்று சாடினார். அதேபோல், அசாம் முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹிமந்த பிஸ்வ சர்மாவும் இன்றும் கட்ச் பகுதியில் பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் சூரத்தில் பிரசாரம் செய்து பாஜக ஆட்சியின் சாதனைகள் பற்றி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+