For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜனவரி 16-ம் தேதி தேர்தல்!

காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் ஜனவரி 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் ஜனவரி 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்பிக்களாக ஜனார்த்தன் திவேதி, கரன் சிங், பர்வேஸ் ஹாஸ்மி ஆகியோர் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.

Election Commission announces polls for Rajya Sabha vacancies 16th January

இதனிடையே கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரீக்கர் தனது எம்பி பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். மொத்தத்தில் ராஜ்யசபாவிற்கு இரண்டு இடங்கள் காலியாக உள்ளது.

இதைதொடர்ந்து மொத்தம் 5 ராஜ்யசபா உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து 3 இடங்களும் உத்தரப்பிரதேசம் மற்றும் சிக்கிமில் இருந்து தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான ராஜ்ய சபா எம்பி தேர்தல் இடைத்தேர்தல் ஆகும்.

டெல்லி, உத்திரபிரதேசம், சிக்கிம் சட்டசபை வளாகத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதியான அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

English summary
Election Commission announces polls for Rajya Sabha vancancies 16th January. Three MPs need from Delhi and one from Sikkim. and one from Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X