அதிமுக பொதுச் செயலாளர் நீக்கம்... பைலாவில் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்புதல்

அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது, சில பதவிகள் சேர்க்கப்பட்டது உள்ளிட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.

ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. இதையடுத்து சசிகலாவை பொது செயலாளராக மூத்த நிர்வாகிகள் நியமித்தனர். இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.

இணைந்தன

இணைந்தன

அதிமுகவின் நலனுக்காக இரு அணிகளும் இணைய வேண்டுமானால் சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருக்கக் கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். இதையேற்றுக் கொண்டதை அடுத்து இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன.

புதிய பதவிகள் ஏற்பு

புதிய பதவிகள் ஏற்பு

இதையடுத்து கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. அப்போது சசிகலா வகித்த பொதுச் செயலாளர் பதவியை நீக்குவது என்றும் அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டன.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இதைத் தொடர்ந்து அதிமுக கட்சி பதவியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் அதிமுக கட்சி விதியிலும் அமைப்பு ரீதியாகவும் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.

யாருக்கு அதிகாரம்

யாருக்கு அதிகாரம்

இந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டது குறித்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+