தேர்தல் விதி மீறல்... ராகுல் காந்தி,அமித் ஷா,லாலு பிரசாத் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: பீகாரில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி,பாரதீய ஜனதா கட்சி தேசியத்தலைவர் அமித் ஷா, ராஷ்டீரிய தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பீகாரில் சட்டசபைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடந்து வருகிறது. இத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் விதியை மீறியதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி,பாரதீய ஜனதா கட்சி தேசியத்தலைவர் அமித் ஷா, ராஷ்டீரிய தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி,அமித் ஷா, லாலு பிரசாத் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேர்தல் விதி மீறல் குறித்து நாளை மறுநாளுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தேசியத்தலைவர் அமித் ஷா, ‘பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் வெடி வெடித்துக் கொண்டாடுவார்கள்' என பிரச்சாரத்தில் கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதப்பிரச்சினையை தூண்டும் வகையில் அமித் ஷா பேசியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கு அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ‘பாஜக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்வதாக பேசியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ராஷ்டீரிய தலைவர் லாலு பிரசாத் யாதவ், அமித் ஷாவை நரபட்சி என கூறியதற்காக அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
-
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications