EVM-ஐ மட்டுமல்ல.. எதை வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம்! முன்னாள் மத்திய அமைச்சருக்கு எலான் மஸ்க் பதில்
காந்தி நகர்: ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒழிக்க வேண்டும் என எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்திருந்தது. ஏராளமான வழக்குகள் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன.

இதை கிளப்பியது மும்பை வடமேற்கு தொகுதியின் லோக்சபா தேர்தல் முடிவுதான். இந்த தொகுதியில் பாஜக கூட்டணியின் ஷிண்டே பிரிவை சேர்ந்த வேட்பாளர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டு அதன் மூலமாகவே வெற்றி கிடைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இதற்கிடையில் உலகின் மிகப்பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். ஏனெனில் மனிதர்கள் அல்லது AI மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது” என்று x தளத்தில் பதிவிட்டிருந்தார். இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவாதங்களை சூடுபிடிக்க வைத்தது.
இந்த பதிவை மேற்கோள்காட்டி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆராய்வதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும்போது ஜனநாயகம் சீர்குலைந்துவிடும்” என்று ராகுல் காந்தியும் x தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் முன்னாள் மத்திய அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர், எலான் மஸ்க்கின் x தள பதிவை மேற்கோள் காட்டி, “இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என்று கூறியிருந்தார். இதற்கும் தற்போது எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.
அதாவது, “எதையும் ஹேக் செய்யலாம்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது இந்த x தள பதிவுகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
எலான் மஸ்க் ட்வீட்டின் பின்னணி: அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குப்பதிவு முறைகேடுகள் தொடர்பாக சுயேச்சை அதிபர் வேட்பாளரான ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் பக்கத்தில், “போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் இவிஎம் இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால், வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஆவணங்கள் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் மனிதர்கள் அல்லது ஏஐ மூலமாக ஹேக் செய்யும் ஆபத்து உள்ளது என்ற ரீதியில் பதிவிட்டு இருந்தார். எலான் மஸ்க்கின் இந்த பதிவு இந்தியாவில் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
இனி தினம் ரூ.576 கோடி செலவு செய்தால் கூட.. எலான் மஸ்க்கால் சொத்தை தீர்க்கவே முடியாது! சுவாரசிய கதை -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications