For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தில் திடீர் புகை... அவசரமாக தரையிரங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் இருந்து மங்களூருக்கு புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் பகுதியில் திடீரென புகை வெளியேறியதால் பெங்களூர் விமான நிலையத்திலேயே விமானம் அரவர அவசரமாக தரையிரக்கப்பட்டது.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மங்களூருக்கு இன்று காலை 10 மணிக்கு 65 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் கிளம்பிச் சென்றது. விமானம் பறக்கத்தொடங்கிய சில நிமிடங்களில் கேபின் அறையில் இருந்து புகை வெளியாகியுள்ளது.

 Emergency landing of Jet Airways flight at Banglore

இதையறிந்த விமானிகள், பெங்களூர் விமான நிலையத்திற்கே அவசரமாக மீண்டும் விமானத்தை திருப்பியுள்ளனர். காலை 10.20 மணியளவில் விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

விமானத்தில் 65 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகள் இருந்தனர். அதில் 5 பயணிகள் மட்டும் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளின் கொண்டு வந்த உடைமைகள் அனைத்தும் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஜெட் விமானம் மூலம் பயணிகள் அனைவரும் மங்களூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Jet Airways Flight 9W 2839 going to Mangaluru from Bengaluru returned to the Kempegowda International Airport Bengaluru (KIAB) , after smoke was observed in the cabin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X