ஓடும் ரயிலில் திடீர் தீ: அச்சத்தில் கீழே குதித்த பயணிகள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ரிசியா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. சில பயணிகள் தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து கீழே குதித்தனர்.
கோண்டாவில் இருந்து பரேலிகுக்கு செல்லும் கோண்டா எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 10.32 மணியளவில் உத்தரபிரதேசத்தின் ரிசியா மற்றும் மடேரா ஆகிய ரயில் நிலையங்களுக்கு நடுவே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜினில் திடீரென தீ பற்றிக்கொண்டது. தீயின் புகை ரயில் பெட்டிகளுக்குள் வந்தது. சில பயணிகள் அப்போது விழித்திருந்ததால் தீ.. தீ.. என்று கத்தியபடியே அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.

சிலர் தீயிலிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். ரயில்வே அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு, ரயில் காலதாமதமாக அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து கிளம்பி சென்றது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications