பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிய என்ஜினியர் உள்பட 4 பேர் கைது
டெல்லி: பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ளிய என்ஜினியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் கார்காச்சியைச் சேர்ந்த 15 வயது பெண் ஒருவர் ராஜா என்பவரை காதலித்துள்ளார். தான் டெல்லியில் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறியுள்ளார் ராஜா. மேலும் அவர் சிறுமியை அவரது பெற்றோர் சம்மதத்துடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே 50 பெண்களை கடத்திய ராஜா சிறுமியை சப்னா கௌர்(25) மற்றும் கௌரவ் கௌர் ஆகியோரிடம் கடந்த ஜுலை மாதம் விற்றுவிட்டார்.
சில நாட்கள் கௌர்களின் வீட்டில் வேலை செய்த சிறுமியை மீரட்டில் விபச்சார தொழில் நடத்தி வரும் ராதாவிடம் அனுப்பி வைத்துவிட்டனர். அங்கு சிறுமியை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திவிட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சிறுமி தனது வாடிக்கையாளரின் செல்போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்தார். அவர்கள் கொடுத்த போலீஸ் அதிகாரியின் எண்ணில் தொடர்பு கொண்டு தனக்கு நடந்ததை விவரித்தார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் இருந்து சிஐடி குழு மீரட் விரைந்து சென்றது.
கடந்த வெள்ளிக்கிழமை சிஐடி குழு உள்ளூர் போலீசார் உதவியுடன் சிறுமி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டது. மேலும் ராதாவை(30) போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுமி டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி சப்னா கௌர் மற்றும் என்ஜினியரான கவ்ரவ் கௌர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வேலை வாங்கித் தருவதாக பக்கத்து வீட்டுக்காரரால் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணையும் ஜி.பி. ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் இருந்து போலீசார் மீட்டனர். கணவர் விவாகரத்து செய்ததால் மகனை காப்பாற்ற வேலைக்கு கிளம்பிய அவர் தீயவர்களின் கையில் சிக்கிவிட்டார். மேலும் அப்பாவி பெண்களை வைத்து தெற்கு டெல்லியில் பாலியல் தொழில் செய்து வந்த சோனியா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஜி.பி.ரோட்டில் அந்த பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம் குறித்த தகவல் சப்னா மற்றும் கவ்ரவிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications