விதி முறையெல்லாம் மீறல! லலித் மோடி பயண ஆவணங்கள் குறித்து இங்கிலாந்து விளக்கம்!
லண்டன் : ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் வழங்கியதில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து அரசு விளக்கம் அளித்து உள்ளது.
ஐ.பி.எல்- போட்டிகளில் நிதி மோசடி செய்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி.

கடந்த ஆண்டு மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக லண்டனில் இருந்து போர்ச்சுகல் செல்வதற்கு இங்கிலாந்து அரசிடமிருந்து பயண ஆவணங்கள் பெற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும் மனிதாபிமான அடிப்படையில் தான் இதில் உதவியதாக சுஷ்மா சுவராஜ் கூறினார். இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இவ்விவாகாரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு தனது விளக்கத்தை தற்போது அளித்துள்ளது.
வழக்கமாக இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களில் விரிவான விளக்கம் எதையும் அளிப்பதில்லை என்றும், இந்த பிரச்சினையைப் பொறுத்தவரை இங்கிலாந்து நாட்டின் உரிய சட்டவிதிகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் உள்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்தின் விசா மற்றும் குடியேற்ற இலாகாவின் தலைமை இயக்குனர் சாரா ராப்சன், இந்த பிரச்சினையை உரிய முறையிலும் மற்றும் தொழில் ரீதியிலும் திருப்திகரமான முறையில் கையாண்டதாகவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications