பெங்களூர் டிராபிக் பிரச்சினைக்கு தீர்வு.. 24 கி.மீ தூர மெட்ரோ சேவை 10 நாளில் தொடக்கம்
பெங்களூர்: பெங்களூர் நகர மக்களின் நெடுநாள் கோரிக்கையான மெட்ரோ ரயில் கிழக்கு-மேற்கு பாதை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. இதன் மூ லம், நகரின் மத்திய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு பெங்களூரின் பையப்பனஹள்ளி முதல், எம்ஜிரோடு வரையிலான சுமார் 6 கி.மீ தூரத்தில் கடந்த சில வருடங்களாக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

எம்.ஜி.ரோடு முதல் மெஜஸ்டிக் வரையிலான (மத்திய பேருந்து நிலையம்-ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி) 5 கி.மீ தூர பாதையில் சுரங்க பாதைகள் அமைவதால் அந்த பணி மெதுவாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், எம்.ஜி.ரோடு-மெஜஸ்டிக் வரையிலான ரயில் பாதை பணிகள் முடிந்துவிட்டதாக பெங்களூர் நகர பொறுப்பு அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மேற்கு பகுதியிலுள்ள மைசூர் ரோட்டில் இருந்து மெஜஸ்டிக் அடுத்துள்ள ஏரியாவான மாகடி ரோடு வரை ஏற்கனவே மெட்ரோ பணிகள் முடிந்திருந்த நிலையில், மாகடிரோடு-மெஜஸ்டிக் நடுவே வெகுகாலம் பணி நடந்து வந்தது. அதுவும் முடிவடைந்துவிட்டதாம்.
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இந்த பாதைகள் பொது பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தெரிகிறது. மெஜஸ்டிக் பகுதியில் ரயில்வே இருப்பு பாதைகள் மற்றும் ரயில் நிலையம் அமைந்துள்ளதால், ரயில்வே துறை தனது பாதுகாப்பு சர்டிபிகேட்டை தந்ததும் மெட்ரோ இயக்கம் தொடங்கும் என ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஏப்ரல் மாதம் முதல், பையப்பனஹள்ளி முதல் மைசூர் ரோடு வரையிலான 24 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும். இந்த கிழக்கு-மேற்கு காரிடாருக்கு, பச்சை காரிடார் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போது இவ்விரு பகுதிகளையும் பிற வாகனங்களில் கடக்க வேண்டுமானால், குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகும். மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த தூரத்தை 40 நிமிடங்களில் கடந்துவிடலாம் என கூறப்படுகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு பெங்களூரை நகரின் முக்கிய பகுதியான மெஜஸ்டிக்கோடு இணைப்பதால், பஸ் போன்ற வாகனங்களை தவிர்த்து மக்கள் மெட்ரோவை பயன்படுத்துவது அதிகரிக்கும். தற்போது தினமும் 45 ஆயிரம் மக்கள் மெட்ரோவை பயன்படுத்துகிறார்கள். இது பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் மத்திய பெங்களூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications