சிறைக்கு செல்லும் வழியில் தப்பியோடிய கைதி... 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கைது
மும்பை: மும்பை பாந்திரா கோர்ட்டில் இருந்து சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய கைதி, சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப் பட்டுள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இம்டியாஸ் கான் (50) என்பவரை கடந்த 2000-ம் ஆண்டு புனே போலீசார் கைது செய்து பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை எரவாடா சிறைக்கு கொண்டு செல்ல பாந்திராவில் இருந்து கல்யாணுக்கு மின்சார ரயிலில் அழைத்துச்சென்றனர்.
கல்யாண் ரயில் நிலையத்தில் இறங்கியபோது இம்டியாஸ் கான், போலீசாருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து தப்பிச் சென்றார். இதனையடுத்து போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இம்டியாஸ் கான், வாஷியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்து சென்று அவரைக் கைதுசெய்தனர். பின்னர் இம்டியாஸ் கான் விசாரணைக்காக புனே போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டார்.
இம்டியாஸிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 14 ஆண்டுகளாக டெல்லி, கர்நாடகா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் தன் பெயரை பைசல் கான் என மாற்றி ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவற்றையும் பெற்றுக் கொண்டு வாழ்ந்ததாலேயே இம்டியாஸை கண்டி பிடிப்பதில் இவ்வளவு தாமதம் ஆனதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications