காஷ்மீரில் மாத ஊதியத்திற்கு 'பணியாற்றும்' தீவிரவாதிகள்.. யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: தீவிரவாதம் என்பது இப்போதெல்லாம் அமைப்புக்குள் செயல்படும் ஒரு தொழிலை போல மாறிவிட்டது. இதற்கு காஷ்மீரில் ஊதியம் கொடுத்து தீவிரவாதிகளை வேலைக்கு அமர்த்தி வைத்திருக்கும் தீவிரவாத அமைப்புகளே சான்று.

அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகு காஷ்மீரில் லோக்கல் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாக குறைந்தன. காரணம், சம்பளம் சரியாக போய் சேராததுதான் என்கிறார்கள்.

Ever wondered how much a terrorist earned? Here is the breakdown

பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், தீவிரவாதிகளின் ஊதியம் குறித்த ஒரு பார்வை இதோ:

வெளிநாட்டிலிருந்து வந்து இணையும் தீவிரவாதிகளுக்கு ஆரம்பத்தில் ரூ.50,000 முன்பணம்/சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதுவே உள்நாடு, உள் மாநில லோக்கல் நபர்கள் எனில் முதலில் ரூ.10ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை கொடுக்கப்படும்.

மாத ஊதியம்: வெளிநாட்டினர்-ரூ.15,000, உள்நாட்டினர்-ரூ.3,000 முதல் ரூ.10,000.

'ஓய்வு பெறும்' தீவிரவாதிக்கு அளிக்கப்படும் தொகை: வெளிநாட்டு தீவிரவாதி- 2,00,000. உள்நாட்டு தீவிரவாதி- 2,00,000.

சிறந்த தீவிரவாதியாக தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வழங்கப்படும் விருது: வெளிநாடோ உள்நாடோ யாராக இருந்தாலும் தலா ரூ.1 லட்சம்.

தீவிரவாத குழுக்களின் கமாண்டர் பதவியிலிருப்பவர்களுக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரமாகும். இறந்து போன தீவிரவாதிகளின் குடும்பத்திற்கு முதலில் ரூ.50 ஆயிரமும், மாதா மாதம் 5 ஆயிரமும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறதாம். அதுவே உள்ளூர் தீவிரவாதி எனில் அவனது குடும்பத்தாருக்கு ரூ.25ஆயிரம் முதலிலும், மாதா மாதம் 3 ஆயிரமும் கொடுக்கப்படுகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+