ஆபாச சிடியை ரிலீஸ் செய்த டெல்லி மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது
டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாரின் ஆபாச சிடியை வெளியிட்டதாக அவரது உதவியாளர் பிரவின்குமாரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் ஆம் ஆத்மியில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சந்தீப் குமார் தொடர்பான ஆபாச வீடியோவில் அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண் டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஆண்டு ரேசன் கார்டு தொடர்பாக அமைச்சர் சந்தீப் குமாரை அணுகியபோது அவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.
இதனடிப்படையில் சந்தீப் குமார் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், சந்தீப் குமாரிடம் நடத்திய விசாரணையில், பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது முதன்மை உதவியாளரான பிரவின் குமார் என்பவர் வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து டெல்லி தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் பிரவின் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர். இந்த ஆபாச சிடியை வைத்து சந்தீப் குமாரை மிரட்டி வந்ததாகவும் பிரவீன்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications