நாட்டை உலுக்கிய நிலக்கரி ஊழல்.. முன்னாள் செயலர் குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை - டெல்லி கோர்ட் அதிரடி
நிலக்கரிச் சுரங்க வழக்கில், முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: நாட்டையே அதிரச் செய்த நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில், முன்னாள் செயலர் குப்தாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மத்திய அரசின் ஆட்சி நடந்தபோது, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1.80 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ருத்ராபுரி நிலக்கரி சுரங்கம், கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது என்பதை சிபிஐ கண்டுபிடித்தது.
இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில், ஹெச்.சி.குப்தா, க்ரோபா, சமாரியா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பரத் பரஸார், முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் இணைச் செயலர் கே.எஸ். க்ரோபா, முன்னாள் இயக்குனர் கே.சி. சமாரியா, கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர் பவன்குமார் அலுவாலியா ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் ஹெச்.சி.குப்தா உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications