For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனிமே சிகரெட் பிடிப்பீங்களா?: வரி 72 சதவீதம் உயர்வு!!!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: சிகரெட் மீதான சுங்க வரி 11 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் விலை அதிகரிக்கும்.

2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Excise duty on cigarettes hiked from 11 to 72%

எதிர்பார்த்தபடியே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சிகரெட் மீதான சுங்கவரியை 11 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இந்த வரியை 100 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக் கொண்டாராம். ஆனால் அவரின் கோரிக்கையை முழுமையாக ஏற்காமல் 72 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளனர்.

இது தவிர சிகரெட் உற்பத்திக்கான வரி 16 சதவீதமும், புகையிலை பொருட்களுக்கான வரி 55 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி சிகரெட், புகையிலை பொருட்கள் வாங்க கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

சிகரெட் பிடிக்காதீர்கள், புகையிலை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று அரசு கூறினால் யாரும் கேட்க மாட்டார்கள். அதற்கு தான் இப்படி மறைமுறைமாக பிரச்சாரம் போன்று.

English summary
Centre has increased the excise duty on cigarettes from 11 to 72 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X