மகளுக்கு ரூ. 500 கோடியில் ஆடம்பர திருமணம்.. "மைனிங்" ரெட்டிக்கு ஐடி நோட்டீஸ்
ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ஆடம்பர திருமணம் செய்தது தொடர்பான கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ. 500 கோடியில் திருமணம் நடத்தி வைத்தது தொடர்பான கணக்கு வழக்குகளை நவம்பர் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணத்தை நடத்தி அனைவரையும் அசரடித்தார். நாட்டு மக்கள் 500க்கும், 1000க்கும் தெருத் தெருவாக அலையும் நிலையில் அவரது இந்த ஆடம்பர திருமணம் அனைவரையும் அதிரவும் வைத்தது.

சுரங்க முறைகேடு வழக்கில் சிறைக்குப் போன ஜனார்த்தன ரெட்டி தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் பாஜகவின் முன்னாள் அமைச்சர். ஆனாலும் பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. ரெட்டியின் மகள் திருமணம் குறித்து ராஜ்யசபாவிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. நாடு முழுவதும் இந்த திருமணம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் பெல்லாரியில் மாபியா ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க நிறுவன அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது ரெட்டிக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், வருகிற 24ம் தேதிக்குள் திருமணம் தொடர்பான கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
3 பக்கம் கொண்ட இந்த நோட்டீஸில் மொத்தம் 16 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன்பும், திருமணத்தின்போதும் ஆன செலவுகள், இடம், உணவு, நகை உள்ளிட்டவற்றுக்கா செலவிடப்பட்ட தொகை என பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும் பணம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளின் எண்கள் குறித்த விவரமும் கேட்கப்பட்டுள்ளது. கையிருப்புப் பணத்தை எங்கிருந்து பெற்றனர் என்ற விவரமும் கேட்கப்பட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications