ரயில் டிக்கெட் ரிசர்வேசன்… இனி பெண்களுக்கு தனி க்யூ...: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு தனி கவுண்டர் திறக்க வலியுறுத்தியுள்ள ரயில்வே அமைச்சகம், இந்த டிக்கெட் கவுண்ட்டர்களில் அவர்கள் யாருக்காக டிக்கெட்டு வாங்கினாலும் அதனை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில் மகளிருக்கென்று தனி கவுண்ட்டர் திறக்கப்படும். ஒரு ஷிப்டில் குறைந்த பட்சம் 120 டிக்கெட்டுகள் விற்பனையாகும் மையங்களில் இது அறிமுகப்படுத்தப்படும்.

டிக்கெட் முன்பதிவு
அப்படி குறைந்த பட்ச டிக்கெட் விற்பனை நடைபெறாத மையங்களில் ஏற்கனவே உள்ள மூத்த குடிமக்கள், உடல் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோருக்கான கவுண்ட்டரில் மகளிருக்கான டிக்கெட் முன்பதிவுகள் அனுமதிக்கப்படும்.

பெண்கள் வரிசை
பெண்களுக்கு தனி கவுண்ட்டர் இல்லாத மையங்களிலும் கம்ப்யூட்டர் முன்பதிவு இல்லாத மையங்களிலும், பெண்களை அனைவருக்குமான பொது டிக்கெட் கவுண்ட்டரில் நிற்குமாறு வற்புறுத்தக்கூடாது. அந்த பொது டிக்கெட் கவுண்ட்டரிலேயே பெண்களுக்கான தனி வரிசையை அனுமதிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு பலகையை தெளிவாக தெரியுமாறு மையங்களில் வைக்க வேண்டும்.

முறைகேடுகளை தடுக்க
ஒட்டுமொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்தல் மற்றும் இடைத்தரகர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த வசதியை காலை 11.30 மணியில் இருந்து தொடங்க வேண்டும்.

ஆண்களுக்கு அனுமதியில்லை
பெண்களுக்கு தனிச் சலுகை வழங்கப்படும் இந்த டிக்கெட் கவுண்ட்டர்களில் அவர்கள் யாருக்காக டிக்கெட்டு வாங்கினாலும் அதனை அனுமதிக்க வேண்டும். ஆனால் அந்த கவுண்ட்டர்களில் பெண்களுக்காக முன்பதிவு செய்ய வரும் ஆண்களை அனுமதிக்கக் கூடாது.

ரயில்வே நிர்வாகம்
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் கவுண்ட்டர்களிலும் தேவையை கருதி இதே வசதியை அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிராந்திய ரயில்வே நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications