கார்த்தி சிதம்பரம் கைது.. மத்திய அரசு மீது காங். குற்றச்சாட்டு.. திமுகவும் கை கோர்த்தது
டெல்லி: கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு உள் நோக்கம் உள்ளதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளன.
காங்கிரஸ் செய்தித்தொடர்பு துறையின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்து இருப்பதன் மூலம், பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெளியாகியுள்ளது.

நிரவ் மோடி, மெகுல் சோக்சி வங்கி மோசடியையும், ஊழல் ஆட்சி, மோசமான நிர்வாகத்தை மக்களிடம் இருந்து திசை திருப்பவும்தான், இந்த நடவடிக்கையை பாஜக அரசு செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ததன் மூலம், காங்கிரஸ் பேசும் உண்மைகளுக்கு பூட்டுபோட்டுவிடலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால், மோடி அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடம் எடுத்துக்கொண்டு செல்வோம், இந்த நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உண்மை உள்ளவர்களாக இருக்கும் என்றார்.
காங்கிரசின் கூட்டணி கட்சியான, திமுகவின், செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை அளித்துள்ள பேட்டியொன்றில், நீரவ் மோடி உள்ளிட்ட விவகாரங்களால் பாஜக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே செய்திகளின் ஹெட்லைனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications