மக்களே ஓசியில் ஏசி..அதுவும் 1.5 கோடி பேருக்கு? அதென்ன பிரதமர் மோடி ஏசி யோஜனா? இப்படியும் ஃப்ராடா?
டெல்லி: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் ஏசி இயந்திரம் பொருத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா 2025 திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி பேருக்கு இலவசமாக ஏசி வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. உண்மையில் இது ஒரு மோசடியான திட்டம் எனவும், மக்கள் இதனை நம்பி தங்களது தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.
கார்டு மேல 16 நம்பர் சொல்லு சார் என பழைய நம்பியார் காலத்து டெக்னிக் கை கொடுக்காததால் தற்போது மோசடியாளர்கள் பல்வேறு வகையான மோசடி திட்டங்களை கையில் எடுத்து வருகின்றனர். ஐபிஎல் மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது புதிய வகை மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் வீட்டில் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தங்கள் வீடுகளில் ஏசி பொருத்தலாம் என நினைக்கிறார்கள். இதற்காக சமூக வலைதளங்களிலும் ஏசி கடைகளிலும் அவர்கள் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இது போன்ற நடுத்தர வர்க்கத்தினரை குறி வைத்து ஒரு கும்பல் களமிறங்கி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத்திய அரசு சார்பாக பிரதமர் மோடி இலவச ஏசி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அறிய வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்ற தலைப்புடன் இந்த செய்தி பரவி வருகிறது.
அதில்,"காற்றில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், மின்சார தேவை மற்றும் மக்களின் மின் கட்டணங்களை குறைக்கும் நோக்கத்திலும் '5 ஸ்டார் ஏசி'யை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளது. பிரதமர் மோடி ஏசி யோஜனா -2025' என்ற பெயரில், மே மாதம் அறிமுகமாகும் இந்த திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யலாம். யமுனா பவர் லிமிடெட் என்ற வலைதளத்துக்கு சென்று பதிவு செய்தால், 30 நாளில், இலவச ஏசி கிடைக்கும். இந்த திட்டத்துக்காக, 1.50 கோடி ஏசி தயாராக இருப்பதால், நம் நாட்டில் பெரிய அளவில் ஏசி, பற்றாக்குறை ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன." என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது மோசடி கும்பலின் கைவரிசை என மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் ஃபேக்ட் செக் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி பேருக்கு ஏசி வழங்கப்படும் என்ற தகவல் போலியானது. மத்திய மின்துறை அமைச்சகத்தில் இருந்து இதுபோன்ற எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களை சேகரிப்பதற்காக இதுபோன்ற போலியான பதிவுகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற இணைப்புகளை மக்கள் கிளிக் செய்து தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். இது உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருட வழி வகுக்கும். ஆன்லைன் மோசடிகளுக்கும் வழிவகுக்கும். இது போன்ற போலி செய்திகளை மக்கள் பரப்ப வேண்டாம்:" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications