ஹவ்ரா ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு!
ஹவ்ரா: மேற்கு வங்கத்தில் உள்ள ஹவ்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பாலக்நுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் ஹவ்ராவில் இருந்து செகந்திராபாத் செல்லும் பாலக்நுமா எக்ஸ்பிரஸ் ரயில் ஹவ்ரா ரயில் நிலையத்தின் 17வது பிளாட்பார்முக்கு நேற்று இரவு வந்தது. ரயிலை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது பொது கம்பார்ட்மென்ட்டில் கவனிப்பார் இன்றி இரண்டு பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பைகளில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த நிபுணர்கள் அந்த பைகளை சோதனை செய்ததில் அதில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் வெடிகுண்டை ஒரு சிலிண்டரில் வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் பிற பிளாட்பார்ம்களில் இருந்த உள்ளூர், நெடுந்தூர ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications