மொட்டை மாடியில்.. நடிகையை சீண்டிய நடிகர்.. மாமனார் முகத்தில் அன்போடு வண்ணம் பூசிய பெண்.. ஹோலி பரபர

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: ஹோலி பண்டிகையானது, வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போது தென்மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஹோலி என்பது வண்ணங்களின் திருவிழா என்றும், வசந்த காலத்தின் வருகையையும், தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் குறிக்கும் ஒரு இந்து பண்டிகை ஆகும்.. எனினும், 2 நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட இந்த பண்டிகையில், கைது, வன்முறை, தற்கொலை போன்ற துயரங்கள் நடந்துள்ளன. அதில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில், ஒரு தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.. கடந்த வெள்ளிக்கிழமை, மாணவிகள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Holy party Actress colour powder

அப்போது அங்கு சென்ற தலைமை ஆசிரியர் வெங்கடபதி, கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி செயல்பட்டுள்ளார்.. இதனை பார்த்து மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தலைமை ஆசிரியருக்கு கொண்டாட்டம்

மாணவிகளிடம் தலைமை ஆசிரியர், அத்துமீறுவதை, அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.. அத்துடன், புட்டபர்த்தி போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தந்ததையடுத்து, தலைமை ஆசிரியர் வெங்கடபதியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

அதேபோல, மும்பையில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது, சக நடிகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 29 வயது சீரியல் நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஹோலி கொண்டாட்டத்தின்போது, நடிகர் குடிபோதையில் இருந்ததாகவும், தனது எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக தன்மீது வண்ணம் பூசிவிட்டாராம்.

பானிபூரி கடையில் ஒளிந்தேன்

போலீஸில் நடிகை தந்த புகாரில், "நான் மொட்டை மாடியில் இருந்த பானிபூரி கடைக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன், ஆனால் அந்த நடிகர் என்னையே பின்தொடர்ந்து வந்து என் மீது வண்ணம் பூச முயன்றார். நான் என் முகத்தை மூடினேன், ஆனால் அவர் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து என் கன்னங்களில் வண்ணம் பூசிவிட்டு, "நான் உன்னை நேசிக்கிறேன், யார் உன்னை என்னிடமிருந்து காப்பாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்" என்றார்.

பிறகு, அவர் என்னை தகாத முறையில் தொட்டு என் மீது வண்ணம் பூசினார். நான் அவரைத் தள்ளிவிட்டேன். நான் மனதளவில் அதிர்ச்சியடைந்து நேராக கழிப்பறைக்குள் சென்றுவிட்டேன்" என்று புகார் தந்திருக்கிறார்.. இது மிகப்பெரிய பரபரப்பை இந்தி திரைப்பட உலகில் ஏற்படுத்தி வருகிறது.

கொந்தளித்து போன மாமியார்

அதேபோல, உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள திரிகால்பூர் என்ற கிராமத்தில் ஒரு சோக சம்பவமே நடந்துள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ஹோலி பண்டிகையின்போது தன்னுடைய மாமனாரின் முகத்தில் வண்ணப்பொடியை பூசியிருக்கிறார். இதைப்பார்த்து கொந்தளித்துவிட்டார் அந்த பெண்ணின் மாமியார்..

உடனே மருகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மருமகள், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் விஷத்தை குடித்துள்ளார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. எனினும் சிகிச்சை பலனின்றி மருமகள் உயிரிழந்துவிட்டார்.. தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+