அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது!
டெல்லி: தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சுமார் 41 நாள்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
எனினும் வாக்களித்தபடி முதல்வரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாகண்ணு தலைமையில் இன்று போராட்டம் நடத்தினர். அவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications