"இந்துக்களுக்கு ஆபத்துனு சொல்லுவாங்க.. நம்பாதீங்க.." ராமர் பற்றியும் பரூக் அப்துல்லா சொன்ன கருத்து
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாகக் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தானது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இதன் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகக் காஷ்மீரில் எந்தவொரு அரசியல் நடவடிக்கை இல்லாமல் இருந்து வருகிறது. அங்குத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்தே வருகிறது.

ஃபரூக் அப்துல்லா
இதனிடையே உதம்பூரில் நடைபெற்ற பேரணியில் காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கலந்து கொண்டார். அப்போது ராமர் இந்துக்களின் கடவுள் மட்டுமல்ல என்று குறிப்பிட்ட ஃபரூக் அப்துல்லா, மத வேறுபாடின்றி அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் அவர் கடவுள் தான் என்றும் அவர் தெரிவித்தார். பாஜகவைக் கடுமையாக விமர்சித்த பரூக் அப்துல்லா, பாஜக ஆட்சியில் இருக்க மட்டுமே ராமரின் பெயரைப் பயன்படுத்துவதாகவும் ஆனால், ராமர் இந்துக்களின் கடவுள் மட்டுமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

ராமர்
இது குறித்து ஃபரூக் அப்துல்லா மேலும் கூறுகையில், "ராம் இந்துக்களுக்குக் கடவுள் மட்டும் அல்ல. இந்த எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் இந்த எண்ணத்தை அகற்றவும். ராமர் அனைவரின் கடவுள்.. முஸ்லீமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் அல்லது ரஷ்யராக இருந்தாலும் சரி, அவர் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் அவர் கடவுள் தான்.. நாங்கள் மட்டுமே ராமரின் சீடர்கள் என்று கூறுபவர்கள் அனைவருமே முட்டாள்கள் தான்.

வெறுப்பு பிரசாரம்
அவர்கள் ராமரின் பெயரில் விற்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு ராமர் மீது உண்மையான அன்பு இல்லை, அவர்களுக்கு அதிகாரம் மட்டுமே தேவை. வேண்டுமென்றால் பாருங்கள்... காஷ்மீரில் தேர்தல் அறிவிக்கப்படும்போது, சாதாரண மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ராமர் கோவிலைத் திறப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். மக்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பு பிரசாரத்தைச் செய்து வருகிறார்கள். இதை உடனடியாக மக்கள் புறந்தள்ளிவிடுகிறார்கள்" என்றார்.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை
முன்னதாக கடந்த நவம்பரிலும் அப்துல்லா இதே போல, ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஆனவர்.. என்று கூறியிருந்தார். தொடர்ந்து பாஜக அல்லாத கட்சிகளிடையே ஒற்றுமை குறித்துப் பேசிய அவர், "எங்கள் ஒற்றுமைக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி.. நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராடுவோம்" என்றார்.

எச்சரிக்கை தேவை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த கேள்விகளை எழுப்பிய அவர், மக்கள் அதைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், காஷ்மீர் தேர்தலுக்கு முன்பாக வெறுப்பு பிரசாரத்தை முன்னெடுப்பார்கள் என்று எச்சரித்த அவர், தேர்தல் நெருங்க நெருங்க இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பேச்சுகள் அதிகரிக்கும் என்பதால் அதற்கு இரையாக வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications