பாஜக தேர்தல் அறிக்கைக்கு பரூக், ஒமர், பிரகாஷ் காரத் கண்டனம்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சாசனப் பிரிவை நீக்குவோம் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370ஐ நீக்குவோம் என்பதும் ஒரு அம்சம்.
இந்த வாக்குறுதிக்கு மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட இதர தேசிய கட்சிகள் 370வது பிரிவை நீக்க அனுமதிக்காது என்றார்.
இதேபோல் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், வாக்கு வங்கி அரசியலுக்கான வாக்குறுதிதான் இது என விமர்சித்துள்ளார்.
ஹிந்துத்துவா அஜெண்டா
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத்தும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார். ராமர் கோயில் கட்டுதல், பொதுசிவில் சட்ட்டம், 370வது பிரிவு நீக்கம் என ஹிந்துத்துவா கொள்கைகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications