கள்ளக்காதலியுடன் கசமுசா.. மகள் பார்த்து விட்டதால் கொன்று ரயில் தண்டவாளத்தில் வீசிய தந்தை
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில், தானும், தனது கள்ளக்காதலியும் சந்தோஷமாக இருந்ததை பார்த்து விட்ட 14 வயது மகளைக் கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசிய தந்தையையும், அவரது கள்ளக்காதலியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோழிக்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் ஒரு சிறுமியின் உடல் கிடந்தது. உடல் முழுக்கக் காயம் இருந்தது. இதையடுத்து போலீஸார் அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையி்ல சிறுமியின் உடலில் விஷம் கலந்திருந்ததும், கடுமையாக தாக்கப்பட்ட தடங்களும் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அந்த சிறுமியை அடையாளம் காண முடியவில்லை போலீஸாரால்.
இந்த நிலையி்ல கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பெண் தனது 14 வயது மகளைக் காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த சிறுமியின் உடலை அந்தப் பெண்ணிடம் காட்டினர். சிறுமியின் உடலைப் பார்த்த அப்பெண், இது எனது மகள்தான் என்று கூறிக் கதறி அழுதார்.
மேலும் தான் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் அவர் கூறினார். இதையடுத்து போலீஸாருக்கு அப்பெண்ணின் கணவர் மீது சந்தேகம் திரும்பியது. அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையைக் கக்கி விட்டார்.
சிறுமியின் தந்தைக்கும், இன்னொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. ஒருமுறை இருவரும் உல்லாசமாக இருந்தபோது அதை இந்த சிறுமி நேரில் பார்த்து விட்டார். இதனால் தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரும், அவரது கள்ளக்காதலியும் சேர்ந்து சிறுமிக்கு விஷம் கொடுத்துள்ளனர். மேலும் அவர் இறந்ததும் உடலைத் தூக்கி தண்டவாளத்தில் போட்டு விட்டனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.
இந்தக் கொடும் செயலுக்கு அச்சிறுமியின் அண்ணன் மற்றும் கள்ளக்காதலியின் மகனும் துணையாக இருந்துள்ளனர். தற்போது நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையி்ல அடைத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications