எம்எல்ஏ மீது உ.பி. முதல்வரிடம் பாலியல் புகார் அளித்த பெண்ணின் தந்தை அடித்து கொலை- பாஜக வெறியாட்டம்!
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் தந்தை, பாஜக கட்சியினரால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் தந்தை, பாஜக கட்சியினரால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அவர் இது பற்றி ஏற்கனவே இரண்டு முறை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அந்த பெண்ணின் தந்தை குல்தீப்பின் தம்பி, மற்றும் சில பாஜக உறுப்பினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். போலீஸ் இன்னும் இந்த சம்பவத்தில் வழக்கு பதியவில்லை.

பிரச்சனை
தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுகுறித்து பலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். இதனால் அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார்.

சண்டை
இதையடுத்து போலீஸ் அவர்களை கைது செய்து பின்பு விடுதலை செய்தது. ஆனால் எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தையை மோசமாக தாக்கி இருக்கிறார்கள். இதில் அவருக்கு உடல் முழுக்க காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சேர்த்தனர்
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிந்துள்ளனர். இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இதையடுத்து இரவோடு இரவாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்தார்
தற்போது அந்த பெண்ணின் தந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். உடலில் அதிக அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு இருப்பதாலும், காயங்கள் அதிகம் இருப்பதாலும் அவர் மரணடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications