14 வயது மகளை 4 வருடமாக சீரழித்த வெறியன் கைது
பெற்ற மகளை கற்பழித்த தகப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

மும்பை: பெத்த மகளையே வெறிபிடித்த மாதிரி பலாத்காரம் செய்த தந்தையால், மகாராஷ்டிராவின் தானே நகரே ஆடிப் போயுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தைக்கு 40 வயது, மகளுக்கு 14 வயது.

மனைவியை பிரிந்தார்
திருமணமானது முதலே மனைவியுடன் இவருக்கு சண்டையும் தகராறும் இருந்து வந்திருக்கிறது. அதனால் 7 வருடங்களுக்கு முன்னாடியே மனைவி, இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். போனவர் தன் பெண் குழந்தையையும் தூக்கி கொண்டு போயிருந்தால் நல்லா இருந்திருக்கும்.

தகப்பன்-மகள்
கோபத்தில் இந்த தகப்பனிடம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். 7 வயதிலிருந்தே பெற்ற மகளை வளர்த்து வந்த தந்தைக்கு திடீரென காம பித்து ஏறி விட்டது. வீட்டில் வேறு யாருமே கிடையாது. தந்தையும்-மகளும்தான்.

4 வருடங்களாக சித்ரவதை
4 வருஷத்துக்கு முன்பிருந்தே மகளை பலாத்காரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் தந்தை. அதுவும் பலமுறை அந்த குழந்தையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இருக்கிறார். 4 வருடங்களாக தந்தையிடம் சிக்கி சின்னாபின்னாமான அந்த பிஞ்சு குழந்தை வேறு வழி இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி அழுதுள்ளது. அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 2 நாளுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார்கள்.

மனிதனா? மிருகமா?
அதனடிப்படையில் 40 வயது தந்தை மீது ஐபிசி பிரிவு 376-ன் கீழும், போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியோ, மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல்களை தானே போலீசார் தெரிவித்துள்ளனர். இப்படி மனசாட்சியே இல்லாமல் மகளிடம் வன்மத்தை காட்டிய இவர்கள் எல்லாம் என்ன ஜென்மங்களோ!!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications