கர்நாடகா பலாத்காரம் செய்யப்படுகிறது.. ஆட்சியை கலையுங்கள்: குமாரசாமி ஆவேசம்
பெங்களூர்: காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதைவிட பெரிய அடி என்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைத்தாக வேண்டும் என்ற உத்தரவுதான்.ஏனெனில் மேலாண்மை வாரியம் அமைந்தால், கர்நாடகாவிலுள்ள கே.ஆர்.எஸ் உட்பட அணைகள் நான்கும் அதன் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். இதை கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.
இதுகுறித்து, மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்த இந்திய கூட்டாட்சி அமைப்பில் கர்நாடக மாநிலம் மட்டும் பலாத்காரம் செய்யப்படுகிறது. இந்த வார்த்தையை நான் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அண்டை மாநிலங்கள் அனைத்தும், கர்நாடகாவின் வளத்தை அள்ளிச் செல்கின்றன.

எனவே இனிமேல், எந்த எல்லைக்கும் போக கர்நாடகா தயாராக வேண்டும். ஆட்சியை கலைக்க கர்நாடக அரசு தயாராக வேண்டும். எத்தனை மாதம்தான் மத்திய அரசு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்திவிடும் என்பதை பார்த்துவிடலாம். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications