குடும்ப உறுப்பினர் இறந்தது போன்று உள்ளது: நர்ஸ் அருணாவாக நடித்த சின்மயி வருத்தம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நர்ஸ் அருணா ஷன்பக் மரணம் அடைந்துள்ளது தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்று உள்ளது என்று நடிகை சின்மயி சுமீத் தெரிவித்துள்ளார்.

மும்பை முனிசிபல் கார்பரேஷன் நடத்தி வரும் கே.இ.எம். மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்த அருணா ஷன்பக் வார்டு பாயால் கடந்த 1973ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அருணா கே.இ.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த அவர் நேற்று மரணம் அடைந்தார்.

இந்நிலையில் அருணா பற்றி நடிகை சின்மயி சுமீத் கூறுகையில்,

அருணா

அருணா

மராத்தி இயக்குனரும், நடிகருமான மறைந்த வினய் ஆப்தே இயக்கிய கதா அருணாச்சி என்ற மராத்தி நாடகத்தில் நான் நர்ஸ் அருணா ஷன்பக் கதாபாத்திரத்தில் நடித்தேன். அருணா இறந்த செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன்.

குடும்ப உறுப்பினர்

குடும்ப உறுப்பினர்

அருணா பலாத்காரம் செய்யப்பட்டபோது நான் மூன்று வயது குழந்தையாக இருந்தேன். அருணா இறந்தது என் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்தது போன்று உள்ளது. பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் சமூகத்தில் வாழ்வதை நினைத்து வருந்துகிறேன் என்றார் சின்மயி.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

கதா அருணாச்சி நாடகம் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டது. நாடகத்தை பார்த்த அனைவருக்கும் நடிகர், நடிகைகளின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் நாடகம் முடிந்த பிறகு அனைவரும் சோகமாக வீடு திரும்பினர்.

மருத்துவமனை

மருத்துவமனை

கடந்த 2002ம் ஆண்டு கதா அருணாச்சி நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தை துவங்கும் முன்பு கதா அருணாச்சி குழுவினர் கே.இ.எம். மருத்துவமனைக்கு சென்று அருணாவை சந்தித்தனர். அருணாவை அருகில் பார்க்க அனுமதி கிடைக்காததால் தூரமாக நின்று பார்த்தனர். தூரத்தில் நின்று பார்த்துமே அவர்களால் அருணாவின் நிலையைக் கண்டு கண்ணீரை அடக்க முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+