நிலவை மேலும் நெருங்கியது சந்திரயான்- 2; 5வது முறையாக சுற்றுப் பாதை உயரம் மாற்றி அமைப்பு!

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீஹரிகோட்டா: நிலவை மிகவும் நெருங்கும் வகையில் சந்திரயான் 2 விண்கலத்தில் சுற்றுப் பாதை உயரம் 5-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோவால் கடந்த ஜூலை 22-ல் சந்திரயான்-2 விண்கலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் -2 விண்கலம் சுற்றி வந்தது.

Fifth Lunar bound orbit maneuver for Chandrayaan-2 performed successfully

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14-ல் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான். பின்னர் ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்க தொடங்கியது சந்திரயான்.

பின்னர் நிலவின் சுற்றுப்பாதை உயரம் அடுத்தடுத்து குறைக்கப்பட்டு வந்தது. தற்போது 5-வது மற்றும் கடைசி முறையாக சந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது நிலவை மிகவும் நெருங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் குறைந்தபட்சம் 119 கி.மீ என்றும் அதிகபட்சம் 127 கி.மீ என மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் சந்திரயான்-2 விண்கலத்தின் அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+