மதரசா பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை நடப்பதாக பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் பரபரப்பு புகார்
திருவனந்தபுரம்: கேரளாவில் மதரசா எனும் இஸ்லாமிய பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக, பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசா எனும் இஸ்லாமிய உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள மதரசா பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் திடுக்கிடும் புகாரை கூறியுள்ளார். மதரசா பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அங்கு இருக்கும் மதகுருமார்கள் பாலியல் தொல்லை தருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை யாரும் வெளியில் சொல்வதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் உள்ள மதரசாவில் தனக்கு இக்கொடுமை நடந்ததாகவும் இயக்குனர் அலி அக்பர் குறிப்பிட்டார். கேரளாவில் உள்ள மதரசாக்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
வாக்கு வங்கிக்காக இத்தகைய சம்பவங்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அலி அக்பர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கேரளா சமூக நலத்துறை அமைச்சர் முனிர், இந்த பிரச்சினையை வெளி கொண்டுவந்ததை வரவேற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் எந்த மதத்தினருக்கு நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனத் தெரிவித்தார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications