For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு- சிவசேனா தலைவர் ராம்தாஸ் கதம் மீது வழக்குப் பதிவு

By Mathi
Google Oneindia Tamil News

FIR against Ramdas Kadam for inflammatory speech
மும்பை: முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காக சிவசேனா மூத்த தலைவர் ராம்தாஸ் கதம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யாண் பகுதியில் சிவசேனா தொண்டர்களிடம் ராம்தாஸ் கதம் பேசியபோது, கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் ஆஸாத் மைதானம் கலவரத்தின்போது, பெண் போலீஸார் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் பழிவாங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் நரேந்திர மோடி பிரதமரானால் 6 மாதத்திலேயே பாகிஸ்தானை அழித்துவிடுவார் என்றும் ராம்தாஸ் கூறியிருந்தார்.

ராம்தாஸ் கதமின் பேச்சு மகாராஷ்டிராவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவரது கருத்தை சிவசேனாவும் ஆதரிக்கவில்லை. இது ராம்தாஸின் தனிப்பட்ட கருத்து, இது கட்சியின் கருத்தல்ல, எங்களுக்கும் இந்தக் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று சிவசேனா ஒதுங்கிக் கொண்டது.

இதைத் தொடர்ந்து ராம்தாஸ் மீது "வெறுப்பை தூண்டும்" வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
An FIR has been registered against Shiv Sena leader Ramdas Kadam for allegedly giving an inflammatory speech during a political rally here two days back, police said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X