ஆந்திரா: பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: 13 பேர் பலி - 5 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
காக்கிநாடா: ஆந்திராவில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாளை மறுதினம் தீபாவளி கொண்டாடப் படுவதை ஒட்டி தொழிற்சாலைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திராவில் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தாக கூறப்படுகிறது.
தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ மள மளவென தொழிற்சாலை முழுவதும் பரவியதாக தெரிகிறது. இத்தீவிபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications