ரிலையன்ஸ் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி; 6 பேர் காயம்
ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜாம்நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆலையில் நேற்று காலை எரிவாயு கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென்று பரவியதால், சில தொழிலாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டார்கள். ஆலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதில் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஜி.ஜி. அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆலையின் ஒரு யூனிட்டில் திடீரென தீப்பிடித்தது. ஆலையின் தீயணைப்பு வீரர்கள் தீயை உடனடியாக அணைத்தாலும் சில ஒப்பந்த தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications