டெல்லி குஜராத் பவனில் தீ விபத்து: 8 வாகனங்களில் சென்று போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
டெல்லி: டெல்லி குஜராத் பவனில் ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெல்லியில் உள்ள குஜராத் பவனின் அடித்தளத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொலைபேசி வாயிலாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர்.

பெரும் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து காலைநேரத்தில் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட குஜராத் பவனின் அடித்தளத்தில் பழைய நாற்காலிகள் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த தீ விபத்துத் தொடர்பாக குஜராத் பவன் அதிகாரிகளே விசாரிக்க வேண்டும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்து உள்ளனர்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications