மஹாராஷ்டிரா கெமிக்கல் ஆலையில் பயங்கர தீ விபத்து... 3 பேர் பலி, 14 பேர் காயம்!
மும்பையில் மருத்து கம்பெனியின் கெமிக்கல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
Recommended Video

மும்பை : மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள மருந்து கம்பெனியின் கெமிக்கல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயனங்கள் வெடித்து சிதறுவதால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளும் பாதிப்பை கண்டுள்ளன. தீ விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூர் நகரில் உள்ள பால்கர் பகுதியில் பார்மசூட்டிகல் நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்படி நேற்று இரவு 11.15 மணியளவில் 25 பீப்பாய்களில் 200 லிட்டர் ரசாயனங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்துள்ளன.

இந்த ரசாயனங்கள் வெடித்ததன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் 3 அடையாளம் தெரியாத உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரசாயன ஆலை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் செயல்பட்டதே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ரசாயனங்கள் வெடித்து சிதறுவதால் இந்த கட்டிடத்தை சுற்றியுள்ள சுமார் 10 மீட்டர்இடைவெளியில் உள்ள வீடுகளின் கண்ணாடி, மற்றும் கதவுகள் சேதமடைந்துள்ளன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications