குவியல் குவியலாக புதையல் கண்டெடுக்கப்பட்ட பத்நாபசுவாமி கோவிலில் தீ விபத்து... 2 பேர் படுகாயம்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவில்லில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறையில் குவியல் குவியலாக தங்க, வைர, வைடூரிய நகைகள் இருந்தது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கோவிலுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் இருந்த கோவிலின் நிர்வாகம் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவினரிடம் உள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

பத்மநாபசுவாமி கோவிலில் தீ விபத்து
இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் கரும்புகை கிளம்பியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.

விரைந்த தீயணைப்புத்துறையினர்
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவனந்தபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவில் பாதுகாவலர்களும் தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 பேர் படுகாயம்
இதனால் தீ கட்டுப்படுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றும் கோவில் பாதுகாவலர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்டோர் ரூமில் தீ விபத்து
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர். வடக்கு வாசல் பகுதியில் பழைய பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் தீப்பிடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மக்கள் திரண்டதால் பரபரப்பு
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து பற்றி தெரிய வந்ததும், ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications