100 நாட்களில் இத்தனை திட்டங்கள் நிறைவேறி இருக்கிறது தெரியுமா? குஜராத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!
அகமதாபாத்: தமது தலைமையிலான 3-வது பாஜக அரசின் முதல் 100 நாட்களில் இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள், உட்கட்டமைப்புகள், விவசாயிகள் என அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமது முதல் 100 நாளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு விவரித்தார்.
அகமதாபாத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: முதல் 100 நாட்களை மக்கள் நலன் மற்றும் தேச நலனுக்கான கொள்கைகளை வகுப்பதிலும், முடிவுகளை எடுப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டோம்.

கடந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று தாம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 100 நாட்களில் 4 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பிரதமரின் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால், நிறுவனங்களில் முதல் வேலைக்கான முதல் சம்பளத்தையும் அரசாங்கம் கொடுக்கும்.
முத்ரா கடனுக்கான வரம்பை ரூ.1௦ லட்சத்திலிருந்து ரூ.2௦ லட்சமாக உயர்த்தி உள்ளோம்.
முதல் 100 நாட்களில் நாட்டில் 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
எண்ணெய் வித்து விவசாயிகள் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலையைப் பெறுவார்கள். சோயாபீன் மற்றும் சூரியகாந்தி போன்ற பயிர்களை வளர்க்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் 'தற்சார்பு' ஆக மாறுவதற்கான வேகத்தை அளிக்கவும், வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி அரிசி மற்றும் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை அரசாங்கம் நீக்கியதால், வெளிநாடுகளில் இந்திய அரிசி மற்றும் வெங்காயத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
கடந்த 100 நாட்களில் ரயில், சாலை, துறைமுகம், விமான நிலையம் மற்றும் மெட்ரோ தொடர்பான டஜன் கணக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 நாட்களுக்குள், நாடு முழுவதும் பல நகரங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நமோ பாரத் விரைவு ரயில் அகமதாபாத் மற்றும் பூஜ் இடையே தனது சேவையைத் தொடங்கியுள்ளது. 100 நாட்களில் வந்தே பாரத் கட்டமைப்பின் விரிவாக்கம் இதுவரை இல்லாதது.
15-க்கும் மேற்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications