"முதலிரவுக்கு".. ஆசை ஆசையா ரூமில் நுழைந்த மாப்ளை.. புதுப்பொண்ணு தந்த ட்விஸ்ட்.. எகிறிதப்பி ஒரே ஓட்டம்
போபால்: ஆசை ஆசையாக முதலிரவு ரூமுக்குள் மாப்பிள்ளை நுழைந்தார்.. அங்கே மணமகள் தந்த அதிர்ச்சியால் நிலைகுலைந்து போய்விட்டார்.. அப்படி என்னதான் நடந்தது?
மத்திய பிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் தடபுடலாக திருமணம் நடந்துள்ளது.. திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தினர் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஏகப்பட்ட கனவுகளோடு இல்லற வாழ்க்கையை தொடங்க, ஆசை ஆசையாக முதலிரவு ரூமுக்கு ஓடினார் மாப்பிள்ளை.. மணமக்கள் இருவருமே தனிமையில் இருந்தனர்..

தையல்கள் : அப்போது, மணப்பெண்ணின் வயிற்று பகுதியில் தையல்கள் போடப்பட்டிருந்ததை பார்த்து மணமகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.ஏன் வயிற்றில் இத்தனை தையல் போடப்பட்டுள்ளது? என்று கேட்டார்.. அதற்கு மணமகள், "கீழே விழுந்துட்டேன், அதனால் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது" என்றார். கீழே விழுந்தால், வயிற்றின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் படுகாயம் ஏற்படுமா? என்று குழம்பி போனார் மாப்பிள்ளை..
மணமகள் மழுப்பலான பதிலை சொல்லவும், மாப்பிள்ளைக்கு சந்தேகம் வலுத்தது.. அதனால், வயிற்றில் போடப்பட்டிருந்த தையல் குறித்தே அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளார்... தொடர்ந்து கேள்விகளை கேட்கவும், மணப்பெண் திணறிவிட்டார்.. அவரது கேள்விகளுக்கு என்னென்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் விழித்தார்.. கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்ள, மாப்பிள்ளை தலையில் 'டமார்' என இடி விழுந்தது.

ஆபரேஷன்: அதாவது இந்த பெண் ஏற்கனவே ஒருவரை காதலித்தாராம்.. அதனால் கர்ப்பமாகிவிட்டாராம்.. 3 மாதத்திற்கு பிறகு, ஆபரேஷன் செய்து கருவை கலைத்துவிட்டாராம்.. ஆபரேஷன் செய்ததால் 7,8 தையல்கள் வயிற்றில் போடப்பட்டிருந்தது.. இந்த விஷயம் எல்லாம் பெண்ணின் குடும்பத்திற்கு தெரியுமாம்.. அதனால்தான், உடனடியாக மாப்பிள்ளையை தேடி திருமணத்தை நடத்தி உள்ளனர்.. நடந்த உண்மைகளையும் மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்களாம்.. இதெல்லாம் மணமகள் சொல்ல சொல்ல, மாப்பிள்ளைக்கு தலையே சுற்றியது..
அதனால், மணமகள் சொல்வது எல்லாம் உண்மைதானா? என்று நேரடியாகவே சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்றார்.. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தனது மனைவியின் அனைத்து தகவல்களையும் மருத்துவமனையில் இருந்து சேகரித்தார். திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை, மனைவியை அவரது அம்மா வீட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்..

செம ட்விஸ்ட்: இப்படி ஒரு ட்விஸ்ட்டை மணப்பெண் குடும்பத்தினர் எதிர்பார்க்கவேயில்லை.. அதனால், மணமகன் குடும்பத்தினர் எதிர் வழக்கு தொடர்ந்து ஜீவனாம்சம் கோரியுள்ளனர்... இந்த விவகாரத்தில் தனக்கு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்று, மாப்பிள்ளை கோரிக்கை வைத்துள்ளார்... சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்ள போவதாகவும் மாப்பிள்ளை அதிரடியாக அறிவித்துள்ளார்.. ஆக, மாப்பிள்ளைக்கு நியாயம் கிடைக்க போகிறதா? அல்லது மணப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் கிடைக்க போகிறதா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications