குஜராத் முதல் கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு! ஆட்சியை பிடிப்பது யார்?
காந்திநகர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டசபை தேர்தலில், முதல்கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி 68% வாக்குகள் பதிவாகியிருந்தன.
2012ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 71.3 சதவீத வாக்கு பதிவாகியிருந்ததாகவும், முழு அளவிலான தகவல்கள் கிடைக்கப்பெற்ற பிறகு, அனேகமாக இந்த தேர்தலிலும் அதையொட்டியே வாக்கு பதிவு சதவீதம் அமைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி மாலையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
குஜராத்தில், 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய இரு தேதிகளில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முதல்கட்ட வாக்குப்பதிவு
ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே இந்த தேர்தல், நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. மீதி 93 தொகுதிகளில் 14ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கிற பகுதிகளில் பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சிக்கு அதன் துணை தலைவர் ராகுல் காந்தியும் நட்சத்திர பிரசாரகர்களாக இருந்து தீவிர வாக்குவேட்டை நடத்தினர்.

977 வேட்பாளர்கள்
இன்றைய முதல்கட்ட தேர்தலில் 977 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் 57 பேர் பெண்களாகும். 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ப்ளூடூத் பயன்பாடு, வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு போன்ற ஒரு சில சலசலப்புகளை தவிர்த்தால், தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

பாஜகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு
இதுவரை பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகியிருந்தன. 3 கருத்துகணிப்புகளின் சராசரி அடிப்படையில் பார்த்தால் பாஜக 105-106 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என தெரிகிறது. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் 116 இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 73-74 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 2012 தேர்தலில் இந்தக் கட்சிக்கு 60 இடங்கள் கிடைத்தது.

18ம் தேதி ரிசல்ட்
அதேநேரம், இம்முறை காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை கைப்பற்றும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இருகட்ட தேர்தல்களும் முடிந்த பிறகு டிசம்பர் 18ம் தேதி ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளுடன், குஜராத் தேர்தல் முடிவுகளும் ஒரே நாளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications