டெல்லி சட்டசபையின் முதல் நாள் கூட்டம் தொடங்கியது
டெல்லி: டெல்லியில் இன்று முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியுள்ளது. நாளை கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் கிடைக்கவில்லை. அந்த கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைத்தன.
அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இரண்டாம் இடத்தைப் பிடித்த ‘ஆம் ஆத்மி' கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர முன் வந்தது.
இதனை அடுத்து டெல்லியின் புதிய முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றார். இலவச குடிநீர் கொடுக்கப்படும் என்றும் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆட்சில் அமர்ந்ததும் இரண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெக்கு சட்டசபையின் முதல் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. ஏற்கனவே ஜனவரி 3ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார். அனேகமாக நாளை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications