கோவாவில் போலீசார் போன்று நடித்து 2 பெண்களை பலாத்காரம் செய்த 5 பேர்
பனாஜி: கோவாவில் 5 பேர் போதை தடுப்புப் பிரிவு போலீசார் போன்று நடித்து டெல்லியைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த 22 வயது பெண் மற்றும் 30 வயது பெண் ஆகியோர் கோவாவில் விடுமுறையை கழித்துள்ளனர். அவர்கள் திங்கட்கிழமை இரவு அன்ஜுனா கடற்கரைக்கு வாடகை டாக்சியில் சென்றுள்ளனர். அப்போது 5 ஆண்கள் அவர்களின் டாக்சியை அர்போரா கிராமத்தில் வழிமறித்து தாங்கள் போதை தடுப்புப் பிரிவு போலீசார் என்று பொய் கூறியுள்ளனர்.

அந்த 5 பேரும் 2 பெண்களின் கைப்பைகளை வாங்கி சோதனை செய்ததுடன் அவர்களை அருகில் உள்ள ஒரு ஃபிளாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து டாக்சி டிரைவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் அந்த 2 பெண்கள் அழைத்துச் செல்லப்பட்ட ஃபிளாட்டை கண்டுபிடித்து சென்றனர். அங்கு அந்த 2 பெண்கள் கண் முன்பு போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
பெண்களை சீரழித்த 5 பேரும் கலன்கூட் கிராமத்தில் இருந்த சர்ச்சைக்குரிய நைட்கிளப்பைச் சேர்ந்தவர்கள். அந்த கிளப்பில் விபச்சாரம் நடப்பதாகக் கூறி கிராமத்து மக்களே அதை இடித்து தரைமட்டமாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் டிராவர் ஜோசப், ஜீவன் பவார், கம்லேஷ் சவுத்ரி, அஜய் குமார் குஷ்வா மற்றும் நதிம் சயீத் என்பது தெரிய வந்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications